அரை நிர்வாணத்தோடு திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டிஏபி பொட்டாஷ் போன்ற உரங்களின் விலையை குறைக்க, யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி - கொள்ளிடம் வழியாக கரை புரண்டு கடலுக்கு செல்லும் காவிரி நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும்,
விவசாய சாகுபடி பயிர்களை அழித்து நாசப்படுத்தும் குரங்கு, பன்றி, மான், காட்டெருமை, மயில் போன்றவைகளை கட்டுப்படுத்த வன பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழை தண்ணீரை ஏரி குளங்களை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர்
திருச்சி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வானத்தோடு திருவோடு ஏந்திநூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO