திருச்சி அருகே ஆடி 28 முன்னிட்டு 108 கிடாவெட்டி சிறப்பு அபிஷேகம்

திருச்சி அருகே ஆடி 28 முன்னிட்டு 108 கிடாவெட்டி சிறப்பு அபிஷேகம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கீழப்பெருங்காளூர் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலி கருப்பண்ணசாமி, மற்றும் பெரியண்ணசாமி, காமாட்சி அம்மன், அய்யனார், 36 பரிவார தெய்வங்களின் வகையற குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அனைவரும் தொழில் காரணமாக வெளியூரில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஆடி 28க்கு வருகை தந்து ஒன்று கூடி கிடா வெட்டுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வேலை நாட்கள் என்பதால் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை குடும்பமாய் குலதெய்வ வழிபாடு நடத்தி 13 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்தனர். இவ்விழாவில் 108 கிடாய் வெட்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக கோவில் மருளாளி ஐந்து அடி உயர அருவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறினார் .

இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாடு அறக்கட்டளை தலைவர் பொறியாளர் கதிரவன் தலைமையில் கோவில் நிர்வாகிகளான பிரபு, ரமேஷ், மயில்வாணன், அருணகிரி, அண்ணாமலை, பொன்னுச்சாமி ராஜாங்கம் மற்றும் குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர் . தற்போது இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2017 ஆம் ஆண்டு குடிப்பாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து மண்டபம் அமைத்தனர், 2019 கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision