திருச்சியில் இருந்து அபுதாபிக்கு முதல் விமான சேவை

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு முதல் விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த நிலையில் அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6:40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். இந்த விமானம் அபுதாபி - திருச்சி மார்க்கத்தில் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision