குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை முறையாக பராமரித்து வளர்த்த பெற்றோர்களுக்கு சான்றிதழ் மற்றும்  பரிசுகளை வழங்கினார் திருச்சி மாவட்ட ஆட்சியர்

குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை முறையாக பராமரித்து வளர்த்த பெற்றோர்களுக்கு சான்றிதழ் மற்றும்  பரிசுகளை வழங்கினார் திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக உலக தாய்ப்பால் வாரவிழா – 2021 வை முன்னிட்டு “தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாப்போம் இது அனைவரின் பொறுப்பு ஆகும்” என்ற கருத்தை முன்னிறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்.... குழந்தையின் முதல் தடுப்பு மருந்தான சீம்பால் குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தருவதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து ஆறு மாதத்திற்குத் தாய்ப்பால் தவிர வேற எதுவும் தரக்கூடாது. 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளையும் 
தரலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். மேலும் தாய்ப்பால் கொடுப்பதினால் தாய்க்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், உடல்நலம் காக்கப்படும். தாய்ப்பாலூட்டுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாய்ப்பாலூட்டுதல் குறித்த விழிப்புணர்வை பொதுநல சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்களின் மக்களிடையே தொண்டு செய்ய வேண்டும். தாய்மார்கள் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் தாயப்பாலுட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்வில் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த துண்டுப்பிரசுரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்.
பின்னர், சென்ற ஆண்டு குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அளித்து, உரிய நேரத்தில் இணை உணவு அளித்து, முறையாகக் குழந்தையைப் பராமரித்து வளர்த்த பெற்றோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ் மற்றும் 
பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

மேலும் செல்லப்பிள்ளை பச்சிளம் குழந்தைக்கான ஆலோசனை மையத்தில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், மாவட்ட - வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர்களை மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvisionn