நல உதவிகள் பெற இசேவை வழியாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

நல உதவிகள் பெற இசேவை வழியாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு கீழ்க்காணும் ஐந்து திட்டங்கள் இணையதளம் வாயிலாக செயல்படுத்தபட உள்ளது.

1. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்

2. உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்

3. வங்கி கடன் மானிய விண்ணப்பம்

4. திருமண உதவித் தொகை விண்ணப்பம்

5. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம்.

மேலும் இந்த சேவைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தாங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் விளம்பரம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகளை மாற்றுத்திறனாளிகள் உடன் பயன்படுத்திடும் வண்ணம் இம்மாதமே இ-சேவை மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

ஜீலை மாத இறுதி வரை விண்ணப்பங்கள் இ-சேவை மூலமாகவும் நேரடியாகவும் பெறலாம். எனவே எதிர்வரும் ஆகஸ்ட்-2023 முதல் தேதியிலிருந்து மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமே பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளி பயனாளிகள் நல உதவிகள் கோரி இ-சேவை வழியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision