தனியார் விடுதிக்குள் கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தனியார் விடுதிக்குள் கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த (15.06.2023)-ம் தேதி, பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் மேட்டுத்தெருவில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் நடந்து சென்றபோது கத்தியை காண்பித்து மிரட்டி சட்டைபையில் வைத்திருந்த பணம் ரூ.800/- கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் பீமநகர் மேட்டுத்தெருவை சேர்ந்த எதிரி கிருபாகரன் (22) த.பெ.ஜோஷி என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிரி கிருபாகரன் மீது தில்லைநகர் காவல்யநிலைய பகுதியில் பூட்டிய கடையில் திருடியதாக ஒரு வழக்கு, கே.கே.நகர் காவல்நிலைய பகுதியில் தனியார் விடுதியில் உள்ள புகுந்து கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக ஒரு வழக்கு, பாலக்கரை காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்டதாக 9 வழக்குகள்,

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய எல்லலையில் பூட்டிய வீடு மற்றும் செல்போன் கடையில் திருடியதாக 2 வழக்குகள், இருசக்கர வாகனம் திருடியதாக 2 வழக்குகள் உட்பட 5 வழக்குகள் என திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, கிருபாகரன் என்பவர் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபவதும், மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால்,

மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision