ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் வைபவம் - தங்க குடத்தில் புனிதநீர்
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் ஆனிமாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நம்பெருமாளுக்கு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை அம்மா மண்டபத்தில் புனித திருகாவிரியில் இருந்து திருமஞ்சனம் (புனிதநீர்) செய்ய தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் நீர் நிரப்பப்பட்டு தங்ககுடத்தை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், வெள்ளி குடங்களை அர்ச்சகர்கள் தோள்களில் சுமந்தும் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்தனர்.
உள்பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் புனிதநீர் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது, மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்து பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கிகள் சாற்றப்படும்.
அதனைத்தொடர்ந்து இன்று மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படும். தைலக்காப்பு செய்தவுடன் இன்று முதல் 48நாள் நம்பெருமாள் (மூலவர்) திருவடிசேவை கிடையாது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் புனிதநீர் கொண்டுசெல்லும் கைங்கர்ய நிகழ்சியினை கண்டுவணங்கியபடி நின்றனர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn