திருச்சி அருகே சாலை விபத்து -கணவன் மனைவிக்கு நேர்ந்த சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் சசிதரன் 41. இவர் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தனது மனைவி ராஜஸ்ரீ (40), 13 வயது மகள் ஆகியோருடன் நேற்று இரவு அவர்களது காரில் பூந்தமல்லியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், இன்று காலை மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சாலிகளம் என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்தனர்.
போது, காரை சசிதரன் ஒட்டி வந்த நிலையில் சசிதரனின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அருகிலிருந்த 10அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்ற தொடங்கியது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி காரில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின் காரிலிருந்த ராஜஸ்ரீ மற்றும் சிறுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்து, அதில் சசிதரன் கால்கள் இரண்டும் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்க முடியாமல் போராடினர்.
108 ஆம்புலன்ஸ் குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கிரேன் இயந்திர உதவியுடன் பள்ளத்திலிருந்து காரை மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீர்ர்கள் மற்றும் தனியார் விபத்து மீட்பு குழுவினரால், காரின் இஞ்சின் பகுதியில் சிக்கியிருந்த சசிதரன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த ராஜஸ்ரீ சிகிச்சை பலனின்றியும், மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சசிதரனும் உயிரிழந்தனர்.
13 வயது சிறுமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision