தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விற்கான பயிற்சி தொடக்க விழா

தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விற்கான பயிற்சி தொடக்க விழா

 தென்னூர், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. 

 பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.NMMS தேர்வு பயிற்சியை திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சைவ. சற்குணன் அவர்கள் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கி பேசியதாவது,

மாணவர்களாகிய நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள். நாங்கள் படித்த காலத்தைவிட தற்போது நீங்கள் தினந்தோறும் உலகில் எந்த இடத்தில் நடைபெறும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இக்காலத்தில் நீங்கள் தினந்தோறும் எழுதிப்பார்த்து திட்டமிட்டு படிக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை கூர்ந்து கவனித்து படித்தால் இத்தேர்வில் வெற்றிபெறலாம். இரண்டு வகையாக நடைபெறும் இத்தேர்விற்கு திட்டமிட்டு படித்து வெற்றி பெற வேண்டும். இச்செயலை நாம் பள்ளியின் மதிய உணவு இடைவேளை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து கூடுதல் பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இத்திட்டத்தை வடிவமைத்த திரு *எஸ். சிவக்குமார்* முதல்வர் பணிநிறைவு, காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்கள் பேசியதாவது.

 தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு பயன்படக்கூடிய ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலமாக 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் 1000 ரூபாய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக கிடைக்கும் . இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இதையொட்டி நம் பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும். இதில் இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும் . மனத்திறன் தேர்வு (MAT) மற்றும் பாடத்திறன் தேர்வு (SAT) ஆகியவை. ஒவ்வொரு தேர்வும் தலா 90 மதிப்பெண்கள் உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 90 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெரும் மாணவர்களை கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் இனவாரி சுழற்சி அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு 48000 ரூபாய் கிடைக்கும் . இதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் 350000க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆகவே தேர்வை நன்முறையில் எழுதி கல்வி முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் இதை ஆக்கி கொள்ளவேண்டும். NMMS தேர்வு பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இலவசமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் அதனையும் பயன்படுத்திக் கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம் எனக்கூறினார்.

திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி மற்றும் அர்ஜூன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். 

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் திரு விஜயகுமார், தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரண்யா, உஷாரணி ஆகியோர் செய்து இருந்தனர்.ஆசிரியை உமா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

 # திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision