திருச்சியில் பள்ளிகள் அளவிலான ஹாக்கி லீக் போட்டி

திருச்சியில் பள்ளிகள் அளவிலான ஹாக்கி லீக் போட்டி

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் இன்று (26.10.2024) காலையில் பள்ளிகள் அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்த லீக் குறித்து திருச்சி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் செயலாளர் கார்த்தி கூறுகையில்..... திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் ஆஸ்ட்ரோ ட்ரப் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பள்ளி அளவிலான ஹாக்கி லீக் வருடத்திற்கு ஒருமுறை என பல வருடங்களாக தொடர்ச்சியாக நடந்தப்படுகிறது.

இந்த வருடம் திருச்சி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் முன்னாள் செயலாளர் டி. காதர்மைத்தீன் நினைவு கோப்பை லீக்காக நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பங்குபெறலாம், ஏழாவது முதல் பன்னிரெண்டாவது வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்குபெறலாம், ஆண், பெண் என தனியாகவும், சீனியர் - ஜூனியர் என்ற பிரிவிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

வெற்றி பெறும் நான்கு அணிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது என்றார். மேலும் கொணலை அரசு பள்ளி மாணவர்களும் இந்த லீகில் பங்குபெற உள்ளனர். ஹாக்கி விளையாட்டிற்கு தேவையான எந்தவித அடிப்படை தேவைகளும் இல்லாத அந்த மாணவர்களுக்கு சென்னையை சேர்ந்த ஸ்பெல்லிங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர், ஹாக்கி விளையாட்டிற்கு தேவையான விளையாட்டு சாதனங்களையும், போக்குவரத்து செலவையும் ஏற்று கொண்டனர் என்றார்.

இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் முன்னாள் ரயில்வே ஹாக்கி வீரரும், பயிற்சியளருமான ரிச்சர்ட் ப்ளட்ஜெர் துவக்கி வைத்தார். உடன் திருச்சி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் செயலாளர் கார்த்தி மற்றும் சீனியர் ஹாக்கி வீரர்கள் கருணாகரன், பாலா, செந்தில், அஞ்சலோ, அரவிந்த் அவர்களுடன் மற்ற சீனியர் ஹாக்கி வீரர்களும் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision