உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அறிவிப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்திதார். அப்போது பேசிய அவர்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்தது. இந்த நிலையில் மாணவர்கள் அந்த கட்டணம் உயர்த்தப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் கட்டணங்களை செலுத்தியே மாணவர்கள் தேர்வெழுதலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கையை ஏற்றே கல்வி துறை செயலாளரின் ஆலோசனையின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வுக்கு இளநிலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.75 என்ற நிலையிலிருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. முதுநிலை மாணவர்களுக்கு ரூ.150 என்கிற நிலையிலிருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
இது தவிர மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிபு சான்றிதழ், இன்னபிற சான்றிதழுக்கும் அதற்கெற்றார் போல் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. மற்ற பல்கலைக்கழக கட்டணங்கள், செலவுகள், எப்பொழுது கட்டணம் உயர்த்தப்பட்டது உள்ளிட்டபற்றை ஆராய்ந்து தான் தேர்வு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என முடிவெடுத்து ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று கட்டணங்களை உயர்த்தினோம். தற்போது இந்த கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது வரும் பருவ தேர்வுக்கு பழைய தேர்வு கட்டணம் செலுத்தியே மாணவர்கள் தேர்வெழுதலாம். அடுத்த பருவ தேர்வுக்கு என்ன கட்டணம் என்பதை ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO