திருச்சி விஷன் செய்தி எதிரொலி - மாநகராட்சி உடனடி நடவடிக்கை
திருச்சி கே.கே.நகர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடத்திற்க்கு தண்ணீர் வசதி அருகில் இருந்து பூங்காவில் உள்ள கிணற்று மூலமாக மோட்டார் வைத்து விநியோகிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் பூங்காவில் உள்ள மோட்டார் பழுதானதால் பொதுகழிப்பறை இடத்திற்கு தண்ணீர் வராததால் கழிப்பிடமும் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் கழிப்பிட இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதுக்குறித்து பொதுமக்கள் திருச்சி விஷனை தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் குறித்து தெரிவித்ததையெடுத்து செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக இன்று அந்த பொது கழிப்பிடத்திற்கு லாரி மூலம் தண்ணீர் எடுத்து வந்து நிறப்பற்றுள்ளது. மேலும் பழுதான மோட்டர் சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொது கழிப்பிடத்தின் அவல நிலை குறித்து செய்தி வெளியிட்ட திருச்சி விஷன் நிர்வாகத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision