திருச்சியில் தார் சாலையின் தரம் 40 நாட்களே - பொதுமக்கள் அவதி

திருச்சியில் தார் சாலையின் தரம் 40 நாட்களே - பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் பாளையம் செல்லும் வழியில் ரங்கநாதபுரம் முதல் ஒட்டம்பட்டி வரையிலான சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சுமார் 181.20 லட்சம் மதிப்பீட்டில் 3470 மீட்டர் தூரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக போடப்பட்ட தார்சாலை கடந்த 40 நாட்களுக்குள்ளாகவே எவ்வித போக்குவரத்து செல்ல ஏதுவாக இல்லாமல் தரமற்ற நிலையில் ஒரு சைக்கிள் கூட செல்லமுடியாதபடி உள்ளது. அந்தச் சாலையில் பயணிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

மேலும் தார்ச்சாலை உள்ளே போடப்பட்ட மண் வெளியே தெரியும்படியும், விதிமுறைகளை சரிவரப் பின்பற்றாமல் அவசர கதியில் தார்சாலை போடப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒட்டம்பட்டியில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவர்கள் தங்களது சைக்கிள் மூலம் தற்போது போடப்பட்ட தரமற்ற தார் சாலையில் பயணிப்பதால் விபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடிய அபாயமும் உள்ளது என மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த இரண்டரை வருடமாக இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், தற்போது பயன்பாட்டிற்கு வந்து 40 நாட்களுக்குள்ளாகவே மிக மோசமானதாக குண்டும், குழியுமாக புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது எனவும், மீண்டும் அரசு விதிகளின் படி அதே பகுதியில் தரமான தார்ச்சாலை அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision