தமிழகத்தில் தொடங்கவுள்ள 2,000 மினி கிளினிக்குகளில் அரசு வேலைவாய்ப்பு உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் உடனடியாக பணி நியமனம் வேண்டும் என தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் ராஜாராம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
Advertisement
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை பேட்டியளித்த ராஜாராம்,
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அமைக்கப்பட உள்ள 2000க்கும் மேற்பட்ட கிளினிக்குகளில் அனைத்திலும் மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ துறையில் காலியாக உள்ள 750 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
Advertisement