மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்
தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுககு சிவபெருமான் தாய்வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த ஸ்தலம் என்பதால் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். சுமார் 3500 பில்லியன் ஆண்டுகள் பழமையான இம்மலை கோட்டையில், இக்கோவிலில் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் என்றழைக்கப்படும் விநாயகர் கோவிலும், மலை நடுவே தாயுமானவர் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5:30 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார்குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்க, கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சிப் தாயுமானவர் சன்னதி பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் ஆயிரம் லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6:00 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என பக்திபரவசத்துடன் முழக்கமிட்டவாறு எம்பெருமானை வழிபாடு செய்து வணங்கிச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறை மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர். மகாதீபம் ஏற்றப்படும் போது சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள், ஓதுவார்கள், இந்து சமய அறநிலையத்துறையினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றபடும் இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision