"நமது வாழ்வு ஒரு முடிவற்ற திருப்பயணம்" - கல்லறை திருநாள்

"நமது வாழ்வு ஒரு முடிவற்ற திருப்பயணம்" - கல்லறை திருநாள்

"நமது வாழ்வு ஒரு முடிவற்ற திருப்பயணம்" - கல்லறை திருநாள்

"சில்லறைத் தேடி அலையும் மனிதர்களே... வாழ பொருள் தேவை. அதேவேளையில் வாழ்வதற்கும் பொருள் வேண்டாமா? என சிந்திக்கத் தூண்டுவது கல்லறை திருநாள். நமது வாழ்வு இறைவன் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றன கல்லறைகள்!

Advertisement

கல்லறைத் திருநாள் அன்று கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் சூட்டி, மெழுகுவர்த்தி ஏற்றி தனது சொந்தங்களை நினைத்து கண்ணீர் விட்டு ஜெபிக்கும் நாள். ஒருவகையில் இந்த கல்லறை திருநாள் நன்றியின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. "நீங்கள் இறந்து விட்டாலும், உடலளவில் எங்களைப் பிரிந்து விட்டாலும், நாங்கள் ஒருபோதும் உங்களை மறப்பதில்லை உங்களின் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு ஒருபோதும் நம்மை பிரித்து விடாது. நமது உறவு என்றென்றும் தொடரும்" என்கிற செய்தியை இந்த கல்லறை திருநாள் வெளிப்படுத்துகிறது.

கத்தோலிக்க திருச்சபைகள் உட்பட சில சபைகளால் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது.‌ அந்த வகையில் திருச்சியில் இன்று தனது சொந்தங்களை நினைத்து கண்ணீர்விட்டு ஜெபித்து கல்லறை திருநாள் கொண்டாடினர்.

Advertisement