ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை

ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டை

திருச்சி மாநகரில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடியில் (POLICE CANTEEN) பொருள்களை சலுகை விலையில் காவல்துறையினரை போல் ஊர்காவல் படையினரும் வாங்கி பயன்பெற தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இன்று (26.10.2024)-ந் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி மாநகரில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினரின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடியில் சலுகை விலையில் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை (POLICE CANTEEN ID CARD) ஊர்காவல் படையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி வழங்கினார்.

இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி ஊர்காவல் படையினர் காவல்துறையினரை போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் (POLICE CANTEEN) குறைந்த விலையில் பொருள்கள் வாங்கி பயன்பெற முடியும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் திருச்சி மாநகரில் சிறப்பாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற நான்கு ஊர்காவல் படையினரை பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள். மேலும் பணியின்போது உயிர்நீத்த ஊர்காவல் படையை சேர்ந்த வேணுகோபால் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை தொகையை இறந்தவரின் மனைவி ஜெயலெட்சுமியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) Sஅரவிந்த், ஊர்காவல்படை ஏரியா கமாண்டர் ராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision