திமுக வட்ட செயலாளரை கண்டித்து தற்காலிக கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திமுக வட்ட செயலாளரை கண்டித்து தற்காலிக கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், வீடு வீடாகச் சென்று ஆக்ஸிஜன் அளவு பரிசோதித்து நோய் தொற்றாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று களப்பணியாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டத்தில் கடந்த 31ம்தேதி பணியமர்த்தப்பட்ட 15 பேர் பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பல இடங்களுக்கு சென்று பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொண்டு பொதுமக்களின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து வந்த நிலையில், இன்றைய தினம் பெரியமிளகுப்பாறை பகுதியில் பணிக்கு வந்த போது, திமுக வட்டச்செயலாளர் புஷ்பராஜ் என்பவர் நகர்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவரை மிரட்டி ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களை நீக்கிவிட்டு திமுக ஆதரவாளர்களை பணியமர்த்தி அவர்களை பணிக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து ஊரடங்கில் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்த படித்த இளைஞர்கள் தற்போது தற்காலிக பணியால் சொற்ப சம்பளம் பெற்று வந்த நிலையில், திமுகவினரின் அராஜக செயலால் பணிபறிக்கப்பட்டதைக் கண்டித்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்கிடக் கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் நகர்புற ஆரம்பசு காதார நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையெடுத்து இதுக்குறித்து தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC