பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1350 ஆவது பிறந்தநாள்-திருஉருவசிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1350 ஆவது பிறந்தநாள்-திருஉருவசிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் திருஉருவசிலைக்கு அவரது 1350 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு அவர்கள்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (23.05.2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்  மாநகராட்சி மேயர்  அன்பழகன்

மாநகராட்சி ஆணையர் திரு வே.சரவணன்  சட்டமன்ற உறுப்பினர்கள் நா. தியாகராஜன் சே.ஸ்டாலின் குமார்,எம் பழனியாண்டி சி. கதிரவன் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் 1200க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தீயணைப்பு  துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision