தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் -அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட கழக செயலாளரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 

அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள முத்தரையர் மணிமண்டபத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வுகளில் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன் மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன் கோவிந்தராஜ் பொன்செல்லையா சந்திரமோகன் பகுதி செயலாளர்கள் தர்மராஜ் மணிவேல் பாபு மோகன் சிவக்குமார் நகரக் கழக செயலாளர் செல்வம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி ராஜேந்திரன் 

பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் - முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர் அமைப்புகள் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision