வார்டு மண்டலம் வாரியாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆய்வு

வார்டு மண்டலம் வாரியாக திருச்சி மாநகராட்சி ஆணையர்  ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன்  அதிகாலையிலேயே வார்டு மண்டலம் வாரியாக சென்று ஆய்வு நடத்தினார் . குறிப்பாக தூய்மைப் பணி, சுகாதார, பணிகள், குடிநீர் வழங்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றி வருகிறார். இதன்படி திருச்சி மாநகராட்சியின் 1வது மண்டலம் 4,5 மற்றும் 6 வது வார்டில் 15.06.22 அன்று அதிகாலை 6 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார் .

திருவானைக்கோவில் துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த பின்னர் மேற்கண்ட 3-வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்தும், சுகாதாரப் பணி குறித்தும் இளநிலை பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர் , மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆணையர் குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் வழங்க வேண்டும் தூய்மை பணி தொய்வில்லாமல் தினந்தோறும் வார்டு பகுதியில் மேற்கொள்ள தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO