திருச்சி மரியன்னை பேராலய தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மரியன்னை பேராலய தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மேலப்புதூர் மரியன்னை பேராலயத்தில் கடந்த 30ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி ஆராதனைகளும் நடைபெற்றது. பத்தாம் நாளாகிய இன்று முக்கிய திருவிழவான தேர் திருவிழா நடைபெற்றது . முன்னதாக திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றினார்.

பின்னர் அலங்கரிக்கபட்ட தேரிலிருந்த காவல் சம்மனசு, சூசையப்பர், மரியன்னை வீற்றிருந்த தேர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து தேரை இழுத்து துவக்கி வைத்தார். மேலப்புதூர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட மூன்று தேரும் மார்சிங் பேட்டை, பாலக்கரை வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

பாடல்களை பாடியவாறு  கிறிஸ்துவர்கள் தேர்பவனியில் பங்கேற்றனர். இத்தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்து நாள் நடைபெற்ற திருவிழா இன்று கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO