பேராசிரியை பணி நீக்கம் செய்ய கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பேராசிரியை பணி நீக்கம் செய்ய கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 800க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு இளங்கலை புவியியல் துறையில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மொத்தம் 91 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் பாத்திமா மரியம் தாஹிரா என்பவர் கல்லூரி நேரங்களில் முறையாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தவில்லை என்றும், மாணவ மாணவிகளை தரக்குறைவாக நடத்தி வருகிறார் என்றும் மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் வகுப்பறையில் மாணவ மாணவிகளை திட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் புவியியல் துறையை சார்ந்த மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேராசிரியை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

இது குறித்து கல்லூரி பொறுப்பு முதல்வர் ஆனந்தவள்ளியிடம் விளக்கம் கேட்டபோது..... பேராசிரியர் பாத்திமா மரியம் தாஹிரா மீது நேற்றைய தினம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட உயர்கல்வி இணை இயக்குனரிடம் (JRD) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision