திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மாணவர்களுக்கு போட்டி

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மாணவர்களுக்கு போட்டி

திருச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவில்  தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பெயரில் மாவட்ட வன அலுவலர் திருச்சி கிரண் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் தலைமையில் உலக வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 1 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டி கட்டுரை போட்டி, வினாடி - வினா ஆகியவை நடத்தப்பட்டது.

அதில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் பிளாஸ்டிக்கை பயன்பாட்டை தவிர்க்கவும் என பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், மேரி லின்சி, உசைன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக Voice Trust  நிறுவனர், பறவைகள் ஆர்வலர் மகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்ட நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் வன ஆர்வலர்கள் மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் வனவர் தாமோதரன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision