பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருச்சிராப்பள்ளி கலையரங்கில் இன்று (13.02.2024) பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் பள்ளியின் மேம்பாட்டிற்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறப்பாக தொடந்து செயல்பட்டு வரும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாநாட்டில் பேசிய மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவரின் ஒழுக்கம் என்பது மிக முக்கியமானது அடுத்த தலைமுறை ஒழுக்கமாக போதைப்பொருள் அடிமை இல்லாமல் இருத்தல் அவசியமாகும் எனவே மேலாண்மை குழு உறுப்பினர்கள் அது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி சுற்றியுள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்வதாக தெரியப்படுத்தினால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 217 தீர்மானங்களில் 206 தீர்மானங்கள் பூர்த்தியாகிவிட்டது . பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தங்களது பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்த்தல் போதை பொருள் இல்லாத பள்ளி மாணவர்களை உருவாக்குதல் 100% தேர்ச்சி என்பதை உறுதி மொழியாக கொண்டு செயல்பட வேண்டும். அடுத்த ஒரு மாத காலம் பள்ளியில் முழுமையான வருகை பதிவுக் கொண்டு இடைநிற்றலை தவிர்க்கலாம்
மேலும் மறு சேர்க்கையையும் அதிகபடுத்த வேண்டும் இது மாணவர்களின் எதிர்காலத்தையும் தாண்டி நம் சமூகத்தின் எதிர்காலத்திற்கான முயற்சி ஆகும். பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவர்கள் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். 100% தேர்ச்சியோடு சிறந்த கல்வி மாவட்டமாக திருச்சியை மேம்படுத்துவதற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு.சங்கரநாராயணன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் திரு.அன்புசேகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision