ஜிம் பயிற்சியாளரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 23.12.21-ந்தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 5வது கிராஸ் நியாயவிலைகடை சூப்பர் மார்க்கெட் அருகில், ஜிம் பயிற்சியாளாரான அருண்பாபு வயது (36) என்பவர் முன்விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் 1) பாலன் (எ) செவன் ஹில்ஸ் பாலன் 2) பார்த்திபன் 3) முகமதுசயிப் 4) அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன் ஆகியோர்கள் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் விசாரணையில் மேற்படி வழக்குகளின் குற்றவாளிகளான எதிரிகள் பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்திராஜ் (எ) அரவிந்தன் ஆகியோர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, மேற்படி எதிரிகள் பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்த்ராஜ் (எ) அரவிந்தன், ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு, தில்லைநகர் ககாவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மேற்கண்ட வழக்கில் கொலை முயற்சிக்கு மூலகாரணமாக செயல்பட்டு தலைமறைவாக இருந்துவந்த கட்டிட ஒப்பந்தக்காரான எதிரி பாலன் (எ) செவன்கில்ஸ் பாலன் என்பவரை தனிப்படையினர் 25.01.22தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றகாவலுக்கு அனுப்பபட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn