திருச்சி மாநகரில் வழிப்பறி செய்த நபர்கள் கைது - 15 பவுன் தங்க நகைகள் மீட்பு

திருச்சி மாநகரில் வழிப்பறி செய்த நபர்கள் கைது - 15 பவுன் தங்க நகைகள் மீட்பு

கடந்த 09.10.21-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைசாமிபுரம், முதல் தெருவில் சந்திரா (52) க.பெ.சிங்காரவேலன் என்பவர் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 15 தங்க தாலி செயினை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரை பெற்றது.

பின்னர் பாலக்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்டை அமைக்கப்பட்டு, தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டடது. மேலும் தனிப்டையின் புலன்விசாரணையில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழுப்பு பாரதியிடம் விசாரணை செய்தபோது, சங்கிலியாண்டபுரம் MGR நகரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் விஜய் ஆகியோருடன் சேர்ந்து, மேற்கண்ட வழிப்பறியை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும் வழக்கு சொத்தான 118 கிராம் (15பவுன்) கொழுப்பு பாரதியின் மனைவி சந்தியா மற்றும் அம்மா தேவி மூலமாக தனியார் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் எதிரிகள் மூலம் வழக்கு சொத்துக்களான சுமார் 15 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. வழக்கின் குற்றவாளிகளான ஹரிபிரசாத் மற்றும் விஜய் கைது செய்யப்பட்டு வழக்கு சொத்துக்கள் 118 கிராம் (15பவுன்) தங்கதாலி செயின் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் காந்திமார்க்கெட் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணிைல் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn