உப்பிலியபுரம் ஒன்றியம், த.பாதர்பேட்டை, அரசுப்பள்ளியில் நிழலில்லா நாள் கொண்டாட்டம்

உப்பிலியபுரம் ஒன்றியம், த.பாதர்பேட்டை, அரசுப்பள்ளியில் நிழலில்லா நாள் கொண்டாட்டம்

உப்பிலியபுரம் அருகே, த.பாதர்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், , மதியம், 12:14 மணிக்கு, ஜீரோ ஷேடோ டே (Zero shadow day)என்ற நிழல் இல்லாத நாள் கண்டுகளிக்கப்பட்டது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் இந்த அதிசய நிகழ்வு இன்று நடந்தது. அந்த நாள் முழுவதும் நிழல் இல்லாமல் இருக்காது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நிழல் இல்லாமல் இருக்கும்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் கூறுகையில் , பூமி தினந்தோறும் சுற்றி வந்தாலும், எல்லா நாட்களும் சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக வருவ தில்லை. அவ்வாறு தலைக்கு மேல் நேராக வரும் போது, நிழல் பூஜ்ஜியம் ஆகிவிடும். அதவாது நிழல் காலுக்கு கீழே இருக்கும். இதுபோன்று, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் செங்குத்தாக வரும் போது, ஒரு பொருளின் நிழல் பூஜ்ஜியம் ஆகிறது. அந்த நாளையே வானியல் ஆய்வாளர்கள், நிழல் இல்லாத நாள் என அழைக்கின்றனர்.

இதன் வாயிலாக பூமி சுழலும் வேகம், அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணக்கிடப்படும், என்றார். மாணவ-மாணவிகள் பூமியில் நிழலில்லா பூஜ்ஜிய நாளை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதன் மூலம் நிழலில்லா நாள் பற்றிய ஒரு புதிய கருத்தை தெரிந்து கொண்டனர்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தேவகுமாரன், இருபால் ஆசிரியர்கள் சுப்ரமணி, சாந்தி , ஆனந்தம்,சுதாகர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision