ஶ்ரீரங்கம் தாயார் கோடை விழாவில் ரெங்க நாயகி பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்

ஶ்ரீரங்கம் தாயார் கோடை விழாவில் ரெங்க நாயகி பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு ஆண்டு தோறும் அரங்கநாதர் மற்றும் தாயாருக்கு பல்வேறு திருவிழா நடைபெறும். இந்நிலையில் அரங்கநாதருக்கு கோடை உற்சவம் நடைபெற்றதையடுத்து, தாயார் சன்னதியில் கோடைத் திருவிழா இன்று தொடங்கியது.

இதில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிக் கோடை மற்றும் உள் கோடை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வெளி கோடை இன்று தொடங்கி வரும் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உள் கோடைத் திருவிழா வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ம் தேதி நிறைவடையும்.

கோடை திருநாளின் முதல் நாளான இன்று ஸ்ரீரங்க  ரங்கநாயகி தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபம் அடைந்தார். அங்கு மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பூக்களையும், பின்னர் மலர் போர்வையினை சாற்றிக்கொண்டு பின்னர் உள் கோடை ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

பின்னர் இரவு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை சென்றடைந்தார். தாயார் கோடை உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டு செல்வர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC