தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை -திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை -திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சிவராசு  மாவட்ட ஆட்சியரகத்தில் பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்......திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூர், துவாக்குடி, முசிறி உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள் மற்றும் 14- பேரூராட்சிகளுக்கு தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை பிரச்சாரம் செய்யக் கூடாது.157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது மற்றும் நேரலை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5796 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3 - கட்டமாக  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
அதிகமாக நபர்கள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த அவர்   நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை, பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார். 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் இதுவரையிலும் யாரும் பெற்றுச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.பதிவான வாக்குகள் 7 வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படும் என குறிப்பிட்டார் .

வாக்குசாவடிகள் அலுவலர்கள் 5796 பேர் முதல் தவணை 98 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 79 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.உள் கூட்டரங்கில் நடைபெறும் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அதிகபட்சமாக 100 பேர் வரை மட்டுமே அனுமதி என மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சித்தலைவருமான சிவராசு பேட்டியளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn