3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் சுமார் 900 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் நலதிட்ட உதவின வழங்கும் முகமிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்குவதாகவும், விழா 12:00 மணிக்கு தொடங்குவதாக அறிவித்திருந்தனர்.

இதனால் பயனாளிகள் காலை 9 மணி முதல் காத்திருந்த நிலையில் 1 மணி ஆகியும், மாவட்ட ஆட்சியர் வரவில்லை. அமைச்சர் வராமல் காலம் கடந்து சென்றதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. திருச்சிராப்பள்ளி மண்ணச்சநல்லூரில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தொடர் ஆய்வில் உள்ளார்.

மதியம் ஒரு மணி வரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தரவில்லை. இதனை அடுத்து அங்கு காத்திருந்த பொது மக்கள் ஒரே இடத்தில் அமர முடியாமல் கலைந்து சென்றனர். இதற்கிடையில் இஸ்லாமியர் பெண் ஒருவர் தொழுகைக்கு செல்ல இயலாத நிலையில், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் உள்ளே அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு அமர்ந்திருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 21 ஊராட்சிகளில் அதிகம் விவசாயம் சார்ந்த கிராமப் பகுதிகளை நிறைந்து காணப்படுகிறது இந்நிலையில் கடந்த 40 ஆண்டு காலமாக வழங்கப்படாத பட்டாவினை இன்று திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடராஜபுரம் அரசங்குடி கிருஷ்ணசமுத்திரம் வாழவந்தான் கோட்டை, திருநெடுங்குளம் பத்தாள பேட்டை உட்பட ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சுமார் 872 பேருக்கு இலவச பட்டாவானது வழங்கப்பட்டது.

மேலும் நடராஜபுரம் ஊராட்சியில் உள்ள கச்சோந்தி மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 40 ஆண்டு காலமாக பட்ட வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் ஒன்பது பேருக்கு இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் மூலம் 78 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகராட்சி காட்டூர் 43 வது வார்டில் உள்ள கலைஞர் தெரு திருவள்ளுவர் நகரில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இந்த விழாவில் பட்டா வழங்கப்பட்டது. இதே போல் வேளாண் துறை சார்பாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் மதிவாணன் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், செந்தில், கூத்தாப்பார் பேரூர்ராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஊராட்சிகள்திட்ட இயக்குனர் கங்காதரணி, வருவாய் கோட்டாட்சியர் அருள் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision