சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மாதாந்திர உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த உண்டியல் திறப்பில் இணைஆணையர் / செயல் அலுவலர் சி.கல்யாணி, சு.ஞானசேகரன், துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலர் (இரட்டை பூட்டு, அலுவலர் கூடுதல் பொறுப்பு),

ஆ. இரவிச்சந்திரன், உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், இரா. ஹரிஹரசுப்பிரமணியன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள்,

இத்திருக்கோயில், நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள் : ரூ.1 கோடியே 04லட்சத்து 24 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 759 கிராம் தங்கமும்,

5 கிலோ 117 கிராம் வெள்ளி, 113 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 264 எண்கள் அயல்நாட்டு நாணயங்கள் இருந்தன. இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் - (09.05.2023)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn