ஊராட்சித் துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு குறைதீர்வு கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணும் பொருட்டு குறைதீர்வு கூட்டம் வருகின்ற (30.05.2023) அன்று 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர்களுக்கு கோரிக்கை ஏதேனும் இருப்பின் மேற்காணுமாறு நடைபெறவிருக்கும்
ஓய்வுதிடர்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை எழுத்து மூலமாக தெரிவித்திடலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn