வாழைத் தோட்டத்திற்கு மருந்து அடிக்க சென்றவர் பலி

May 24, 2023 - 13:55
 1702
வாழைத் தோட்டத்திற்கு மருந்து அடிக்க சென்றவர் பலி

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே கடியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகன் அருண்குமார் (27). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது வாழைத் தோட்டத்திற்கு மருந்து அடிக்க சென்றுள்ளார்.

அப்போது வாழையில் மின் கம்பி அறுந்து கீழே கிடந்ததை அறியாமல் அருண் வாழை தோட்டத்திற்கு மருந்து அடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது காலை வைத்த அருண் தூக்கி வீசியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அருண் உயிரிழந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் அருண் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn