உரங்களை பதுக்கி வைத்திருந்தால் நடவடிக்கை -ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உரங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவின்படி, இன்று (07.10.2022) வட்டாட்சியர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்களைக் கொண்டு 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.
இக்குழுக்கள் மணப்பாறை மற்றும் வையம்பட்டி வட்டாரங்களில் உள்ள 11 உரக்கடைகள், கிடங்குகள் மற்றும் உரக்கடை உரிமையாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். ஆய்வின் அடிப்படையில் வையம்பட்டியில் உள்ள ஒரு உரக்கடையில் 450 கிலோ அம்மோனியம் சல்பேட் உரம் இருப்புக்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது. அந்த உரக்கடை உரிமையாளர் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார்களை இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 9342912122-ற்கு தெரிவிக்கலாம்.
உரங்களை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்கும் உரக்கடை மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO