ஸ்ரீரங்கத்தில் ஆன்மீக பயண பக்தர்கள் தரிசனம்
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அறிவிப்பு எண்.29 இன் படி, பக்தர்களுக்கு புரட்டாசி மாதத்தில் வைணவத் திருத்தலங்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகியவற்றிலும் அதன் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் பக்தர்களுக்கு
ஆன்மீக பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து ஒரு நாளில் குறைந்த பொருட்செலவில், பக்தி சுற்றுலாவை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள வைணவ தலங்களுக்கு பக்தர்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 3வது புரட்டாசி சனிக்கிழமை ஆன இன்று (08.10.2022) ஏற்பாடுகள் செய்யப்பட்டு அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையினர் மூலம் அழைத்து வரப்பட்ட அனைத்து பக்தர்களுக்கும் நல்ல முறையில் திருக்கோவில் நிர்வாகம் மூலம் சாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது.
அழைத்து வரப்பட்ட அனைத்து பக்தர்களுக்கும் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து சால்வை அணிவித்து, சுவாமி படம் மற்றும் பிரசாதப்பைகளை வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO