திருச்சி டாஸ்மாக் கடை மதுபானத்தில் உள்ளே முழு தீக்குச்சி- வாக்குவாதம்

திருச்சி டாஸ்மாக்  கடை மதுபானத்தில் உள்ளே முழு தீக்குச்சி- வாக்குவாதம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்ப்பட்டி அரசு டாஸ்மாக் கடையில் நேற்று (16.07.2023) மதியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கல்லூர்ப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர். இவர் ஒரு மாற்றுத்திறனாளி (34 ) என்பவர் எம்.சி டீலக்ஸ் பிராந்தி ஒரு ஃபுல் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு கடையில் பணிபுரிந்த பெரியசாமி என்பவர் இரண்டு ஆப்பாக கொடுத்துள்ளார்.

இந்த மதுவிற்கு ஸ்ரீதர் ரூபாய் 660- ஐ ஜிபே மூலம் பெரியசாமிக்கு செல்லுக்கு செலுத்தியுள்ளார். பின்பு ஒரு ஆப் பாட்டிலை திறக்க முற்படும்போது அந்த மது பாட்டிலில் ஒரு முழு தீக்குச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த தீக்குச்சியில் உள்ள கந்தகம் முழுவதும் மதுவில் கலந்துள்ளது. 

இது குறித்து அங்கு கடையில் பணிபுரியும் பெரியசாமி என்பவரிடம் கேட்ட பொழுது இது எங்களுக்கு தெரியாது வரும் மது பாட்டில்களைத்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டார். இந்த மதுப் பாட்டிலை வாங்கிய ஸ்ரீதர் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். 

இந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய பாட்டிலில் உள்ள மதுவை குடித்து இறந்தால் என் குடும்பத்தை யார் பார்ப்பது? எனவும் இதுபோல் மது பிரியர்களை அரசு ஏன் இப்படி வஞ்சிக்கின்றது என கூறியுள்ளார். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து புகார் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

இதேபோல் கடந்த மாதம் மது பாட்டிலில் உள்ளே சோடா Products முசிறியில் இரண்டு கவர்கள் ஒட்டப்பட்ட டின் பீர் விற்பனை செய்தது பரபரப்பு அடங்குவதற்குள் இப்படி ஒரு சம்பவம் தொட்டியம் ஏலூர்பட்டி அரசு மதுபான கடையில் நடந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn