அரிஸ்டோ மேம்பாலம் பணி 3 மாதத்தில் நிறைவடையும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரிஸ்டோ மேம்பாலம் பணி 3 மாதத்தில் நிறைவடையும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அரிஸ்டோ மேம்பாலத்தின் (சென்னை சாலையை நோக்கிய) பணிக்கு மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிறைவடையாமல் இருக்கும் மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகளை முடிப்பதற்கான வேலைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... கடுமையான முயற்சியால் மேம்பாலம் நிறைவு பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பலபேர் முயற்சி செய்தார்கள். ஆனால் திமுக அரசு வந்தவுடன் அந்த துறை அமைச்சர் முயற்சியினால் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தை கொடுத்துள்ளார்கள்.

இதனால் மூன்று மாதத்தில் பணிகள் முடிவடைந்து விடும். இங்குள்ள மரங்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக மாற்று இடத்தில் வைக்கப்படும். அடுத்து இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO