அதிமுக அரசின் திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் அரசு - திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக அரசின் திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் அரசு - திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் மூன்றாவது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி உள்ளிட்ட மூவர் மட்டுமே கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மூன்றாம் நாளாக காவல் நிலைய ஆய்வாளர் சேரன் முன்னிலையில் கையெழுத்திட்டார். பின்னர் காவல் நிலைய வாசலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.....

தற்பொழுது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது குறித்த கேள்விக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட வழக்கு தலைமை கழக நிர்வாகிகள் முக்கியமானவர்கள் வரும்பொழுது தொண்டர்கள் எழுச்சியுடன் வரவேற்பது வழக்கம் நாங்கள் கட்டுப்பாடுதான் நடந்து கொண்டோம் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி 10,000 பேரை கூடியபோது கொரோனா ஏற்படவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட் திருநெல்வேலி அல்வா அதிமுக அரசின் திட்டங்களை லேபிள் ஒட்டும் அரசாக திமுக அரசு உள்ளது.

ஆளுநரின் அதிகாரம் அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது அதிக அளவில் கூட்டம் கூடியது. தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் நடராஜன், மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட 100 பேர் மீது கொரோனா பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ், அதிக அளவில் கூட்டம் கூடியது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கும் கன்டோன்மென்ட்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO