ஷைன் திருச்சியின் பனை விதை திருவிழாவை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

ஷைன் திருச்சியின் பனை விதை திருவிழாவை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

ஷைன் திருச்சியின் பனை விதை திருவிழா ஆட்சியர் துவக்கி வைத்தார்.திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள பெரியகுளத்தில் ஷைன் திருச்சி அமைப்பு சார்பாக பனை விதைப்போம் பாரம்பரியம் காப்போம் என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி உள்ளனர் .இதன் முதற்கட்டமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பெரியகுளத்தில் பண விதைகளை நட்டு பனை விதை திருவிழாவை துவக்கி வைத்தார்.

முதல் கட்டமாக பெரியகுளத்தில் ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிட்டு உள்ளனர் சுற்றியுள்ள மற்ற நீர்நிலைகளில் பத்தாயிரம் பண விதைகளை நட்டு பனைமரம் மூலம் நீர்நிலை காப்போம் என்று உறுதிமொழி எடுத்து உள்ளனர். தமிழக அரசு ஏற்கனவே பனை மரங்களை பாதுகாக்க  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் பனை விதைகள் மூலம் நமது மாநில மரமான பனை மரத்தை பாதுகாப்போம் என விழிப்புணர்வையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn