சென்னை ஐஐடியில் பயிலவிருக்கும் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியின் அதிகாரப்பூர்வ கற்பித்தல் குழுவான IGNITTE இன் பயிற்சியின் உதவியுடன் JEE Main மற்றும் JEE ADVANCED தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவனான அருண்குமாருக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Metallurgical and Materials Engineering துறையில் இடம் கிடைத்துள்ளது. இச்சாதனையை போற்றும் விதமாக, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அருண்குமாருடன், IGNITTE க்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த Young Indians நிறுவனமும், முந்தைய வருடம், IGNITTE இன் உதவியுடன் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்த சேதுபதி மற்றும் புகழரசி ஆகிய மாணவர்களும், IGNITTE குழுவின் உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
IGNITTE குழுவின் உறுப்பினர்கள் நுழைவு தேர்வுகளுக்குத் தேவைப்படும் தரமான கல்வியை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதன் பயனாக கொரோனா ஊரடங்கு காலங்களிலும் பல அரசு பள்ளி மாணவர்கள் IGNITTE-இன் பயிற்சியின் காரணமாக இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் பயின்று
வருகின்றனர்.
இந்த வெற்றி பயணம் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என நம்புகிறது IGNITTE. கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ், முதல்வர் (மாணவர் நலன்) டாக்டர். குமரேசன், IGNITTE இன் ஆசிரிய ஆலோசகர்கள் டாக்டர் மஞ்சுளா, முன்னாள் ஆசிரிய ஆலோசகர் டாக்டர் வெங்கட கிருதிகா, Young Indians நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision