உலக பூமி தினம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்

உலக பூமி தினம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தன்னார்வலர்கள்

அனைத்து உயிர்களும் வாழ உகந்த கிரகமான பூமியில் மக்கள்தொகை பெருக்கம், இயற்கை வளங்கள் குறைந்து வருதல் மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பூமி அழிந்துக் கொண்டு வருகிறது. எனவே இயற்கை அன்னையை பேணிகாத்து அதன் மூலம் பூமியை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் உலக பூமி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உலக பூமி தினத்தை முன்னிட்டு மண்வளம் காப்போம் இயக்கம் சார்பில் மண்வளம் பாதுகாப்பு குறித்து திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து மண்வளம் பாதுகாப்போம் என்ற பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு இசை இசைத்தபடி பூமி தினத்தில் மண்வளத்தை பாதுகாக்காவிட்டால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

3 சதவீதம் கரிமபொருட்கள் இருக்ககூடிய மண்ணில் 0.5 சதவீதம் மட்டுமே இருப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி உண்ணும் உணவில் சத்துக்கள் குறைந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் பூமியைப் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO