திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்ற மாநகராட்சி முடிவு?
தமிழ்நாட்டின் மையப் பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம் இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், திருச்சி மாநகராட்சி தற்போது உள்ள மத்திய பேருந்து நிலையத்தை வணிக இடமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
தற்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2245 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றது. தொலைதூரப் பேருந்துகள், நகர பேருந்துகள் என்று எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலோடு காணப்படும். திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைய உள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பேருந்துகளின் தொடக்கப்புள்ளியாக பஞ்சப்பூர் மாற்றப்படும். அதே சமயத்தில் நகர பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் தொடர்ந்து இயக்கப்படும் வசதிகளை கருத்தில் கொண்டும் வருவாய் ஈட்டுவதற்காகவும், சமூக பயன்பாட்டிற்கு ஏற்றவாறு திருச்சி மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
2024-25 பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ஒரு கோடு ஒதுக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்களில் நிவர்த்தி செய்யும் வகையில் அலுவலக இடங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களுடன் கூடிய வணிக வளாகங்கள் உருவாக்குவதும் திட்டத்தில் அடங்கும். மாநகராட்சிக்கு வருவாய் ஒருபுறம் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றால் திருச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அனைவரின் எண்ணமாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision