சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தை உருக்கும் திட்டம் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தை உருக்கும் திட்டம் தொடக்கம்

தமிழக இந்து சமய அறநிலைய துறை கீழ் கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை சமயபுரம், இருக்கன்குடி, திருவேற்காடு ஆகிய கோயில்களில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட 127 கிலோ 385 கிராம் தங்கம் நகை ஆபரணங்களை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிசந்திர பாபு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு முன்னிலையில் தங்கத்தை கணக்கெடுக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்விற்கு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு அனுமதியில்லை என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn