ஸ்ரீரங்கம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தி.ப.மாயவன் காலமானார்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தி.ப.மாயவன் காலமானார்

தி.பி.மாயவன் ஶ்ரீரங்கம் சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து, திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக ஶ்ரீரங்கம் தொகுதி நகராட்சியாக இருந்த போது நகராட்சி தலைவராக பதவி வகித்தார். இதுமட்டுமின்றி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.பி.மாயவன் நேற்று இரவு காலமானார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn