பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

Nov 19, 2023 - 10:29
Nov 19, 2023 - 11:25
 304
பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி கிழக்குத் தொகுதியில் மாநகரத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை மார்க்கெட் பாலக்கரை கலைஞர் நகர் ஆகிய பகுதி கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிற முகாம்களில் முழுமையாக கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பதும் இறந்த மற்றும் மாற்றமான வாக்காளர்களை பெயர் நீக்கம் செய்வதும் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாவட்ட கழக்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் இதை கண்காணிக்க கேட்டுக் கொண்டார்

கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் மாநில அணி நிர்வாகி வண்ணைஅரங்கநாதன் மாநகரக் கழக துணைச் செயலாளர்கள் சந்திரமோகன் பொன் செல்லையா பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ஆர் ஜி பாபு டி பி எஸ் எஸ் ராஜ்முகமது மணிவேல் பாக முகவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision