திருச்சி மாநகரத்தில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.

திருச்சி மாநகரத்தில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று குற்றச்சம்பவங்கள் மற்றும் உடல்ரீதியான குற்றங்கள் (Crime and bodily offence) நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் அழைத்து பொது இடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் (Vulnerable area awareness meeting) நடைபெற்றது.

மாநகரத்தில் கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் 4 இடங்கள் தில்லைநகர் காவல் சரகத்தில் 3 இடங்கள், பொன்மலை, கேகே நகர், ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட் ஆகிய காவல் சரகங்களில் தலா 2 இடங்களில் உட்பட மொத்தம் 15 இடங்களில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் குற்றம் மற்றும் உடல் ரீதியான குற்றங்கள் தடுப்பு, காவல் செயலி (KAVALAN APP), சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம், நடைபெற்றது.

தங்கள் பகுதிகளில் குற்றம்புரிவோர் பற்றி தகவல்களை உடனடியாக காவல்துறைகக்கு தெரிவிக்கவும், கடைகள், அபார்ட்மெண்ட்டுகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்க கேமரா பொருத்தவும், இரவு காவலாளிகளை பணியில் அமர்த்தவும், அறிவுறுத்தப்பட்டது. மாநகரில் குற்றங்களை தடுக்கும்பொருட்டு பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படவேண்டும் எனவும், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் (WHATSAPP) நம்பர் ஆகியவை தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision