திருட்டு குற்ற சம்பவங்கள், போதை பொருள் புழக்கம், ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் எஸ் பி கூட்டம்

திருட்டு குற்ற சம்பவங்கள், போதை பொருள் புழக்கம், ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் எஸ் பி கூட்டம்

திருச்சி மாவட்டத்தில், இன்று (05.10.2024) மற்றும் நாளை (06.10.2024) ஆகிய நாட்களில், பொது பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடந்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு காவல் நிலைய அதிகார வரம்பிற்குள்ளும் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளில் சமுதாய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டங்கள். உள்ளூர் மக்களுடன் காவல்துறை தொடர்பு கொள்வதற்கும், பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், செயலூக்கமான குற்றத் தடுப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு தளமாகச் செயல்படும். இக்கூட்டத்தில், CCTV கேமராவின் முக்கியத்துவம், சைபர் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுத்தல், போக்குவரத்து சாலை விபத்துகள் பற்றிய விழிப்புணர்வு,

போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு, குற்றத்தடுப்பு மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது முதலானவை இச்சமுதாய விழிப்புணர்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலையங்களில், அந்தந்த காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குறிப்பாக குற்றங்கள் மற்றும் உடல் ரீதியான குற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய 2 இடங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் மொத்தம் 62 இடங்களில் இன்று மேற்படி சமுதாய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் திருட்டு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீரன் நகர். போதை பொருள் புழக்கமுள்ள ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கள்ளிக்குடி மற்றும் ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெறும் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு கூட்டங்களில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார் தலைமையேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் தெரிவிப்பவரின் விபரம் இரகசியம் காக்கப்படும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision