புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநில சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் தலைமை தாங்கினார். அவரது உரையில், சங்கம் உருவானது குறித்தும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசியவர் சங்கத்தின் அடுத்த அடுத்த வேலை திட்டங்களை குறித்தும் குறிப்பிட்டார். மாநில பொதுச் செயலாளர் சாலை செல்வம் சந்திப்பை நெறிப்படுத்தினார் .

இணையவழியில் சங்க நடத்திய கருத்தரங்கத்தின் உரைகளைத் தொகுத்த, நவீனச் சிறார் இல்ககியம் நோக்கமும் அதன் பாதையும் எனும் நூல் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு நூலை எஸ் ஆர் வி பள்ளியின் தலைமை செயல் அதிகாரி துளசிதாசன் வெளியிட அருட்தந்தை சகேஷ் சந்தியா பெற்றுக் கொண்டார் 'எழுத்தாளர்கள் தங்கள் பள்ளிக்கு வந்ததை பெருமையாக நினைப்பதாகவும் பல்வேறு படைப்பாக்க முயற்சிக்கு தங்கள் பள்ளி உறுதுணையாக இருப்பதையும் தெரிவித்து நல்லதொரு வாழ்த்துரையை வழங்கினார் துளசிதாசன்.

நிகழ்வில் நடந்த கருத்தரங்கத்தில் சமகால சிறார்கள் இலக்கியத்தின் சிறப்பான படைப்புகள் குறித்தும், அது செல்ல வேண்டிய திசை குறித்தும் விரிவாகப் பேசினார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன். அடுத்து பேசிய பத்திரிகையாளர் ஆதி வள்ளியப்பன் சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் செம்மையாக்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். கிளைகள் செயல்படும் விதம் குறித்த வழிகாட்டலை முன்வைத்தார் எழுத்தாளர் விழியன். தமிழ்நாடு முழுவதில் முழுவதிலும் இருந்து வந்திருந்த உறுப்பினர்கள் தங்கள் செயல்பாடுகளை கூறினர். நிறைவாக, சங்கத்தின் முதல் மாநிலக் குழு தேர்வுசெய்யப்பட்டது. சிறார் இலக்கியம் தொடர்பான முன்னெடுப்புகளை இன்னும் வலிமையாக கொண்டு செல்ல இந்த சந்திப்பு உதவும் என்று மாநிலப் பொதுசெயலாளர் சாலை செல்வம் தெரிவித்தார்

நிகழ்வில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கமலாலயன், பாலபாரதி, கார்த்திகா கவின்குமார், மணிகண்டன், வெற்றிச்செழியன், இனியன் கலகல வகுப்பறை சிவா அறிவரசன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision