இந்தியாவிலேயே எங்கேயும் இல்லாத அளவுக்கு திருச்சியில் ஒரு கோடி மரக்கன்றுகள் - மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்

இந்தியாவிலேயே எங்கேயும் இல்லாத அளவுக்கு திருச்சியில் ஒரு கோடி மரக்கன்றுகள் - மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சனமங்கலம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, சுய உதவி குழுக்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பல்வேறு துறைகளில் சார்பில் 756 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 28 லட்சம் 96 மதிப்பில் உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வழங்கி பேசியதாவது....

இந்த மனுநீதி முகாமிற்கு வந்திருக்கும் நிறைய பேர் விசிரிட்டே இருக்கீங்க பாக்க முடிகிறது அதற்கு ஒரு முக்கிய காரணம் வந்து பருவநிலை மாற்றம். அந்த பருவநிலை மாற்றம் கடந்த ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அளவுக்கு வெயில் இருந்து இருக்காது. ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தால் இந்த அளவுக்கு ஒரு வெயில் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு பீரியட் ஒவ்வொரு ஆண்டும் வந்து வெயிலின் தாக்கம் அதிகமாயி கொண்டே போகுது. 

திருச்சி மாவட்டத்தினுடைய மொத்த வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கான திட்டம் சனமங்கம் ஊராட்சியில் துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே எங்கேயும் இல்லாத அளவுக்கு ஒரு கோடி மரக்கன்றுகளை இந்த சனமங்கலம் ஊராட்சியில் வந்து வளர்த்தெடுக்கப்பட இருக்கிறது. அது ஆரம்ப கட்டமாக ஒரு 50 லட்சம் மரக்கன்றுகளை சனமங்கலம் ஊராட்சியின் மூலமாக வளர்த்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கோடி மரம் அப்படின்னா வந்து சாதாரணமா பார்க்க முடியாது. ஒரு நர்சரி கார்டனில் 3000 மரங்கள், மரக்கன்றுகள் பார்க்கலாம். மேலும் நான்காயிரம் கன்றுகள் பார்க்கலாம். ஆனால் இங்கு இந்தியாவில் மட்டுமல்ல அதாவது மரக்கன்றுகளை பொறுத்தவரையில் உலக அளவில் இதுபோன்ற ஒரு பெரிய ஒரு நர்சரி வந்து ஒரு ஊராட்சியை தொடங்கப்படுவது இதுவே முதல் முறை அது சனமங்கலத்தில் தொடங்கியிருப்பது.

 நாம் அனைவருக்கும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம். அத்தனை மரங்களையும் நாம் வளர்த்தெடுப்பதோடு மட்டுமில்லாமல், நம்ம திருச்சி மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பொது இடங்களில் நடவு செய்ய இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து பயனாளிகள் 756 பயணங்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 28 லட்சம் மதிப்புள்ளான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த முகாமில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவ சுப்ரமணியன், மற்றும் வேளாண்மை துறை, ஆதி திராவிட நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கால்நடை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அரசின் 15 துறை அலுவலர்களும் மற்றும் சனமங்கலம் ஊராட்சி மக்களும் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision